Home இலங்கை சமூகம் ஈரான் – இஸ்ரேல் மோதல் நிலை! இலங்கை எரிபொருள் விநியோகம் பாதிப்படையுமா..

ஈரான் – இஸ்ரேல் மோதல் நிலை! இலங்கை எரிபொருள் விநியோகம் பாதிப்படையுமா..

0

நாட்டில் தேவையான எரிபொருள் கையிருப்பு  இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜனக  ராஜகருணா தெரிவித்துள்ளார். 

ஈரான் – இஸ்ரேல் மோதலின் தாக்கம், இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் ஏற்படக் கூடிய தாக்கம் உள்ளிட்டவை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

போதுமான எரிபொருள் இருப்பு

இதன்படி, அடுத்த இரண்டு மாதங்களுக்கு, நாட்டில், போதுமான எரிபொருள்
இருப்புக்கள், இருப்பதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய மோதல் காரணமாக விநியோகத்தில் எந்த இடையூறும் ஏற்படாது என்றும் அவர்
உறுதியளித்துள்ளார்.

இலங்கை இறக்குமதி செய்யும் 92 ஒக்டேன் பெட்ரோலில் பெரும்பாலானவை மலேசியா,
சிங்கப்பூர், ஓமன் மற்றும் இந்தியாவிலிருந்து வருகின்றன,

அத்துடன், டீசலும், மோதல்கள் இடம்பெறும் இடங்களில் இருந்து இறக்குமதி
செய்யப்படவில்லை என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார். 

NO COMMENTS

Exit mobile version