Home உலகம் உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த சோழக் கோப்பை: வெற்றியை தட்டி தூக்கிய கனடா

உலகத் தமிழர்களை ஒன்றிணைத்த சோழக் கோப்பை: வெற்றியை தட்டி தூக்கிய கனடா

0

2025 இற்கான பிரிமியர் கோல்ஃ விளையாட்டு போட்டியில் கனடாவின் (Canada) தமிழ் கோல்ஃ வீரர்கள் அணி வெற்றியை தனதாக்கியுள்ளது.

உலகலாவிய ரீதியில் தமிழ் கோல்ஃ வீரர்களை ஒன்றினைக்கும் சோழக் கோப்பையின் இரண்டாவது பருவம் வெற்றிகரமாக முடிவடைந்தது.

இதில் கனடா தமிழ் கோல்ஃ வீரர்கள் அணி, பிரித்தானியாவின் (United Kingdom) தமிழ் கோல்ஃ வீரர்கள் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழ் கோல்ஃ வீரர்கள்

குறித்த வெற்றியின் மூலம் தமிழ் கோல்ஃ வீரர்கள் சங்கத்தின் தலைவர் ரதீசனின் பல நாள் கனவு தற்போது நிறைவேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா அணியின் இந்த வெற்றி, குழுவினரின் நீடித்த பயிற்சி மற்றும் ஒற்றுமையினால் நிகழ்ந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழர் அடையாளம்

அத்தோடு, துணைத் தலைவரின் நிலைத்தன்மை மற்றும் வழிகாட்டலுக்கு சிறப்பு நன்றி செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பிரதான ஆதரவளித்த Golf Town நிறுவனத்திற்கும் தமிழ் கோல்ஃ வீரர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

குறித்த வெற்றி தமிழர் அடையாளத்தை உலகளவில் எடுத்துச் செல்லும் ஒரு பெரிய வெற்றியாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version