Home இலங்கை சமூகம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள தேசிய வேலைத்திட்டம்!

அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள தேசிய வேலைத்திட்டம்!

0

சமூகத்தை வலுவூட்டல் மற்றும் பொருளாதார நன்மைகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுதலை உறுதிப்படுத்தும் வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘பிரஜாசக்தி’ தேசிய வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

  

இந்த தேசிய வேலைத்திட்டம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜூலை 04 ஆம் திகதி அலரி மாளிகையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

நடவடிக்கைகள்

இதற்கு அவசியமான திட்டமிடல் மற்றும் ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் பிரஜாசக்தி தேசிய செயற்படுத்தல் குழுவின் முதல் கலந்துரையாடல் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

அந்தக் குழுவின் தலைவர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சர் உபாலி பன்னிலகே மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் பங்கேற்புடன் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version