Home முக்கியச் செய்திகள் நள்ளிரவில் மீண்டும் எகிறிய எரிபொருள் விலை…! பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுமா

நள்ளிரவில் மீண்டும் எகிறிய எரிபொருள் விலை…! பேருந்து கட்டணங்களில் மாற்றம் ஏற்படுமா

0

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை திருத்தியமைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐஓசி (LIOC) மற்றும் சினோபெக் நிறுவனங்களும் எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளன.

எரிபொருள் விலை திருத்தத்துடன் பேருந்து கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த இரண்டு நாட்களில் முடிவு எடுக்கப்படும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (National Transport Commission (NTC)) தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு கூடி இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்க உள்ளதாக அதன் பணிப்பாளர் நாயகம் நவோமி ஜெயவர்தன தெரிவித்தார்.

எரிபொருள் விலை திருத்தம்

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை முதல் திகதி முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டிருந்தாலும், எரிபொருள் விலை திருத்தத்துடன் இன்று (01) அது செயல்படுத்தப்படாது என்று நவோமி ஜெயவர்தன மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) நேற்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லங்கா ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 289 ரூபாவாக அதிகரித்துள்ளது.

மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 7 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.

மேலும் 92 ஒக்டேன் பெட்ரோல் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 305 ரூபாவாகும்.

NO COMMENTS

Exit mobile version