Home இலங்கை சமூகம் எரிபொருள் விலை கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிபொருள் விலை கட்டுப்பாடு தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

0

ஜனவரி மாதம் முன்வைக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் எரிபொருள் விலை நிரந்தரமாக கட்டுப்படுத்தப்படும் எனத் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விலை திருத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளின் விலை 

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், அது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படவில்லை.

விலைக் கட்டுப்பாடு எவ்வாறு மேற்கொள்ளப்படும், வரிகள் எவ்வாறு குறைக்கப்படும் என்பது வரவு செலவுத் திட்டத்தில் நிரந்தரமாக தீர்மானிக்கப்படும்” என்றார்.

இதேவேளை,
கடந்த 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பெட்ரோலின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும்,
2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 2025ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version