Home இலங்கை சமூகம் டித்வா புயலின் கோரம்!பலருக்கு மத்தியில் ஒரே குடும்பத்தின் ஆறு பேரின் இறுதிக்கிரியைகள்

டித்வா புயலின் கோரம்!பலருக்கு மத்தியில் ஒரே குடும்பத்தின் ஆறு பேரின் இறுதிக்கிரியைகள்

0

குருணாகல் – இப்பாகமுவ பிரதேசத்தில் இயற்கையின் சீற்றத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 06 பேரின் இறுதிக்கிரியைகள் பல மக்களின் கண்ணீருக்கு மத்தியில் இன்று(03) நடைபெற்றன.

கடந்த 28ஆம் திகதி ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி குறித்த குடும்பத்தினர் உயிரிழந்தனர்.

இந்தநிலையில், ஆறு பேரின் இறுதிச் சடங்குகள் இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழப்புக்கள்

இதேவேளை, நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலின் தாக்கம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474ஆக உயர்வடைந்துள்ளது.

இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன. 

குருநாகல் மாவட்டத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதுடன் 27 பேர் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version