Home இலங்கை பொருளாதாரம் இலங்கையில் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் – மத்திய வங்கியின் பரிந்துரை

இலங்கையில் கிரிப்டோ கரன்சியின் எதிர்காலம் – மத்திய வங்கியின் பரிந்துரை

0

கிரிப்டோ கரன்சியை தொடரும் முறை தொடர்பில் கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக உயர் மட்டக் குழுவை நியமிக்குமாறு இலங்கை மத்திய வங்கி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மத்திய வங்கி ஏற்கனவே நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளது.

இவ்வாறு ஒரு உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டால், இலங்கை கிரிப்டோகரன்சிகளை எவ்வாறு தொடர வேண்டும் என்பது குறித்து சில கொள்கை முடிவுகள் எடுப்பதற்கு பரிந்துரைகள் வழங்கப்படும்.

கிரிப்டோ கரன்சி

தற்போதைய அமைச்சர்கள் சிலர், கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்துள்ளதாக சொத்து அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டதையடுத்து, கிரிப்டோ கரன்சி தொடர்பில் சமீபத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

இவ்வாறிருக்க, சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்திருந்த மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கிரிப்டோ கரன்சி தொடர்பாக தற்போது எந்த சட்டமும் இல்லை என கூறியிருந்தார்.

Source: https://tamilwin.com/article/future-of-cryptocurrency-in-sri-lanka-1759625228

NO COMMENTS

Exit mobile version