Home இலங்கை சமூகம் உறுமய – அஸ்வெசும திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

உறுமய – அஸ்வெசும திட்டங்கள் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

0

பொருளாதாரத்தை பலப்படுத்தி உறுமய மற்றும் அஸ்வெசும போன்ற திட்டங்கள் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவொன்றிலேயே குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதிவில் அவர் மேலும் தெரிவிக்கையில், “எனது ஜந்தாண்டு திட்டத்தின் ஊடாக வாழ்க்கைச் செலவை குறைப்பேன்.

தொழில் வாய்ப்பு

அத்தோடு, வரிச்சுமையை குறைப்பேன் மற்றும் தொழில் வாய்ப்புக்களை அதிகப்படுத்துவோம்.

உறுமய மற்றும் அஸ்வெசும போன்ற திட்டங்கள் குறித்த முன்னெடுப்புகள் தற்போதும் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையில் அனைவரும் ஒன்றுபட்டு இலங்கையை கட்டியெழுப்புவோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/presidential-briefing-on-urumaya-aswesuma-projects-1724974924

NO COMMENTS

Exit mobile version