Home இலங்கை அரசியல் கஜேந்திரகுமார் – சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

கஜேந்திரகுமார் – சுமந்திரன் ஆட்சி அமைப்பதில் இணக்கம்: அதிரடி அறிவிப்பு

0

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடுகள் ஒரே மாதிரியாக காணப்படுவதால் அதன் அடிப்படையில்தான் சபைகள் அமைக்கப்படும் என தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (sumanthiran) தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சி அமைப்பது தொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்,நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கும் (gajendrakumar ponnampalam) இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

குறித்த சந்திப்பை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது குறித்த இணக்கப்பாடு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அறிவிக்காவிட்டாலும் நிலைப்பாடு என்பது பொதுவாகத்தான் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் கூட்டாக எதிர்காலத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் பொதுவான ஒரு நிலைப்பாடு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கை தொடர்பில் அவர்கள் தெரிவித்த விரிவான கருத்துக்கள்,

    

https://www.youtube.com/embed/nwJCf0QOqWk

NO COMMENTS

Exit mobile version