Home இலங்கை குற்றம் காலி- பத்தேகம பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது தாக்குதல்

காலி- பத்தேகம பிரதேச சபையின் பிரதி தவிசாளர் மீது தாக்குதல்

0

காலி- பத்தேகம பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சமன் சி. லியனகே, அடையாளம்
தெரியாத நபர்களால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் நேற்று(24) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது மனைவியுடன் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பத்தேகம கொடகந்த பகுதியில்
சாலையைத் மறித்த ஒரு குழுவினரால் அவர் தாக்கப்பட்டுள்ளார்.

தாக்குதல்

லியனகே தற்போது காலி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் இந்தத் தாக்குதல் தொடர்பாக போத்தல பொலிஸில் முறையிட்டுள்ளார்.

பத்தேகம பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரால் இந்தத் தாக்குதல்
நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழா 2025

NO COMMENTS

Exit mobile version