தனுஷ்
தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி இருந்தது, ஆனால் படம் சரியான வரவேற்பை பெறவில்லை.
அடுத்து தனுஷின் நடிப்பில் இட்லி கடை திரைப்படம் வெளியானது. அடுத்து தனுஷ் போர் தொழில் படத்தை தொடர்ந்து இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் D54 படத்தில் நடிக்க உள்ளார்.
இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இளம் சென்சேஷனல் நடிகை மமிதா பைஜூ இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்கள் நாத்தமடிக்கும் குப்பைகள்.. சீரியல் நடிகை லட்சுமி ஆவேசம்!
வைரல் பதிவு!
இந்நிலையில், D54 படம் குறித்து ஜி.வி. பிரகாஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ” பிளாக்பஸ்டர் படம், எழுத்து மற்றும் ஆடியோ தொடர்ந்து வருகிறது. சமீபத்திய காலங்களில் எனது படைப்புகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய இயக்குநர் மற்றும் சைலண்ட் கில்லர்” என்று தெரிவித்துள்ளார்.
