Home இலங்கை குற்றம் இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

இலங்கையில் கைதான இந்திய செல்வந்தர்! நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

இலங்கையில் கிரிக்கெட் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்தியரை டிசம்பர் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்றுவரும் டி10 கிரிக்கெட் தொடரில் காலி மார்வல்ஸ்(Galle Marvels) அணியின் இந்திய உரிமையாளர் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டில் நேற்றையதினம் (12.12.2024) கண்டி பல்லேகல மைதானத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில், இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையான அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஆட்டநிர்ணய கோரிக்கை

காலி அணியின் உரிமையாளரான பிரேம் தாக்கூர், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த வீரர் ஒருவரிடம் ஆட்டநிர்ணய கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

எனினும், கோரிக்கையை மறுத்த குறித்த வீரர், பொலிஸாரிடம் முறைப்பாடளித்த நிலையில், பிரேம் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version