Home இலங்கை குற்றம் மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் கொடூர செயல்

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் கொடூர செயல்

0

மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக மோட்டார் சைக்கிள் சாரதி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் கனேமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஹல யாகொட பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி 1990 அம்புலன்ஸ் மூலம் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

பொலிஸார் விசாரணை

இதேவேளை, கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிய நபரை பிரதேச மக்கள் தேடிச் சென்றபோது, அவரும் அருகில் உள்ள புதரில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கனேமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Source: https://tamilwin.com/article/ganamulla-area-murter-investigation-1727572180

NO COMMENTS

Exit mobile version