Home சினிமா பாலா நடிப்பில் வெளிவந்த காந்தி கண்ணாடி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

பாலா நடிப்பில் வெளிவந்த காந்தி கண்ணாடி திரைப்படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா, இதோ

0

காந்தி கண்ணாடி

இயக்குநர் ஷெரிஃப் இயக்கத்தில் KPY பாலா ஹீரோவாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி இருக்கும் திரைப்படம் காந்தி கண்ணாடி. இப்படத்தில் பாலாவுடன் இணைந்து நமிதா கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி சக்திவேல், அர்ச்சனா ஆகியோர் நடித்திருந்தனர்.

கடந்த 5ம் தேதி திரையரங்கிற்கு வந்த இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நல்ல ஒரு எமோஷ்னல் திரைப்படம் என மக்கள் தங்களது விமர்சனங்களை கூறி வருகிறார்கள்.

வசூல்

இந்த நிலையில், இரண்டு நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் பாலாவின் காந்தி கண்ணாடி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இரண்டு நாட்களில் இப்படம் உலகளவில் ரூ. 70 லட்சம் வசூல் செய்துள்ளது. முதல் நாளை விட இரண்டாவது நாளில் இப்படத்திற்கு வசூலில் நல்ல முன்னேற்றம் வந்துள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர். 

Source: https://cineulagam.com/article/gandhi-kannadi-2-days-box-office-1757217724

NO COMMENTS

Exit mobile version