Home இலங்கை அரசியல் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை: உடன் பதவி விலகுங்கள்: கொதித்தெழுந்த சாணக்கியன்

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை: உடன் பதவி விலகுங்கள்: கொதித்தெழுந்த சாணக்கியன்

0

முன்னாள் ஜனாதிபதிகளான மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க என மோசமான ஆட்சியாளர்களாக இனங்காணப்பட்ட காலங்களில் கூட இவ்வாறான ஒரு கொலை சம்பவம் இடம்பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அவர்களின் காலத்தில் நீதிமன்றத்தின் குற்றவாளி கூண்டினுள் வைத்து ஒருவர் கொலை செய்யப்படவில்லை என்றும் இவ்வாறான சம்பவங்கள் மூலம் இந்த அராசாங்கம் ஒரு செயல் திறன் இல்லாத அரசாங்கம் என மீண்டும் மீண்டும் நிரூபிக்கபடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இதற்கான பொறுப்பை ஏற்று, பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய அமைச்சர் ஒருவர் பதவி விலகினால் மாத்திரமே நாட்டில் பாதுகாப்பு உறுதியாக இருக்கிறது என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும் என்றும் சாணக்கியன் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதுக்கடை நீதிமன்றத்தினுள் வைத்து ஒழுங்கமைக்கப்பட்ட அமைப்பு குற்றவாளி கணேமுல்ல சஞ்சீவ இன்று கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிக்கையிலேயே இரா.சாணக்கியன் மேற்கண்ட விடயத்தை தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மேலும் கூறுகையில்….  

https://www.youtube.com/embed/8Nwjxd7T_ms

NO COMMENTS

Exit mobile version