Home இலங்கை குற்றம் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

0

பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ படுகொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரனா பொலிஸ் கான்ஸ்டபிள் ஹசித ரோஷன் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.  

பிணையில் செல்ல அனுமதி 

இதன்படி, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2.5 மில்லியன் ரூபாய் இரண்டு சரீரப் பிணையிலும் வெளியில் செல்வதற்கு அனுமதி வழங்கினார்.

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரை தப்பிச் செல்ல வாகனம் வழங்கியதாகவும், உதவியதாகவும் தெரிவித்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version