Home இலங்கை குற்றம் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பிரதான சந்தேகநபர் தொடர்பில் குற்றவியல் பிரிவின் அறிவிப்பு

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! பிரதான சந்தேகநபர் தொடர்பில் குற்றவியல் பிரிவின் அறிவிப்பு

0

பாதாள உலகக் கும்பல் தலைவர் என்றும் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீதிமன்றத்திற்கு அறிக்கை

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு, கொழும்பு குற்றப்பிரிவு இது தொடர்பில் மேலதிக அறிக்கையை சமர்ப்பித்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

கொலைச் சம்பவம்  தொடர்பாக துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபரும் அவர் பயணித்த வாகனத்தின் சாரதியும் தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version