Home இலங்கை அரசியல் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திருப்பு முனை: சபையில் வெடித்த சர்ச்சை

கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திருப்பு முனை: சபையில் வெடித்த சர்ச்சை

0

துபாயில் இருந்து வந்த ரகசிய தகவலின் காரணமாகவே கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர் சில மணி நேரங்களுக்குள் பிடிபட்டதாகவும், அது காவல்துறையின் திறமையால் அல்ல எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அத்தோடு, துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் படங்களைப் பகிர அனுமதிக்க வேண்டாம் என்றும் அவற்றில் குற்றவாளி அதிகாரிகளுடன் அன்பாக நடந்துகொள்வது போல் தெரிகின்றதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

விசாரணை 

இதேவேளை, புகைபப்படங்களை வெளியிட்டு கொலையில் தொடர்புடைய துப்பாக்கிச் சூட்டை நடத்தியவரை ஒரு ஹீரோவாக மாற்றியதற்காக அதிகாரிகளுக்கு கடுமையான விமர்சனங்களையும் அவர் முன்வைத்தார்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், விசாரணை நடத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.

கோரிக்கை

அதனை தொடர்ந்து, அதற்கு பதில் அளித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான சில படங்கள் செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி கையாளப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

மேலும், நாடாளுமன்றத்தில் இதுபோன்ற விடயங்களை முன்வைப்பதற்கு முன் உண்மைகளைச் சரிபார்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

https://www.youtube.com/embed/f5f_oxK2hFA

NO COMMENTS

Exit mobile version