Home இலங்கை குற்றம் கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

0

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேநபர் ஒருவரை கொழும்பு நீதவான் அசங்க எஸ்.போதரகம இன்று(17) உத்தரவிட்டுள்ளார். 

உதார நிர்மல் என்ற சந்தேக நபரே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதன்படி, சந்தேகநபரை தலா 500,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியல் உத்தரவு

இந்த கொலை தொடர்பாக சிம் கார்டுகளை வழங்கியதாக சந்தேகத்தின் பேரில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

பாதாள உலகக் கும்பல் தலைவர் சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கடந்த பெப்ரவரி மாதம் புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தின் பிரதிவாதிகள் கூண்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

அவருக்கு எதிரான மூன்று வழக்குகளில் முன்னிலையாவதற்காக பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையிலிருந்து விசேட பாதுகாப்பின் கீழ் அவர் அழைத்து வரப்பட்ட நிலையில், சட்டத்தரணி போல் வேடமிட்டிருந்த துப்பாக்கிதாரி விசாரணைக் கூண்டில் இருந்த கணேமுல்ல சஞ்சீவவை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, தப்பிச்சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version