வாடகைக்கு வாகனங்களை எடுத்து நாடு முழுவதும் சுற்றி தங்க நகைகளை திருடும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் தத்தெடுக்கப்பட்ட குழந்தையுடன் இருக்கும் ஒரு பெண் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிரியுல்லா- போபிட்டிய பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் தனது தங்க நகைகள் திருடப்பட்டதாக அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது.
தங்க நகைகளை வைத்திருந்த பெண் ஒருவர் தனது மகளுடன் கிரியுல்ல நகரத்தை நோக்கி பயணிக்க சாலையோரத்தில் காத்திருந்தபோது, காரில் இருந்த மற்றொரு சந்தேகநபர், “நாங்களும் கிரியுல்லவுக்குப் போகிறோம், எங்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள்” என்று கூறி அவரது தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
சுமார் ரூ. 137,000 மதிப்புள்ள தங்க நெக்லஸைத் திருடிவிட்டு, காலியில் உள்ள படாதுவ பகுதியை நோக்கி அதிவேக நெடுஞ்சாலையில் அவர்கள் பயணித்த காரில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டு அதிவேக நெடுஞ்சாலையில் நின்றுள்ளது.
ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விசாரணை
சம்பவம் தொடர்பில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விசாரணை நடத்தி, இரண்டு சந்தேகநபர்களையும் தத்தெடுக்கப்பட்ட குழந்தையையும் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலியில் உள்ள படாதுவ மற்றும் யக்கலமுல்ல பகுதிகளில் வசிக்கும் இரண்டு பேரும், குறித்த பெண்ணும் 28, 27 மற்றும் 26 வயதுடைய திருமணமானவர்கள் என தெரியவந்துள்ளது.
இந்த மூவரும் நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து வாகனங்களை வாடகைக்கு எடுத்து, பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் நீர்கொழும்பில் உள்ள ஒரு தனியார் அடகு கடையில் தங்க நகை அடகு வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் கிரியுல்ல பகுதியில் நடந்த பல கொள்ளைகள் மற்றும், பல பகுதிகளில் நடந்த கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தங்க நகையை திருடிய 27 வயது நபர் போதைப்பொருள் கடத்தலுக்காகவும், ஹெரோயின் கடத்தலுக்காகவும் கைது செய்யப்பட்டமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும், கார் மற்றும் வழக்குப் பொருட்களும் குளியாப்பிட்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட உள்ளன.
