Home இலங்கை குற்றம் யாழில் புலனாய்வு துறைக்கு 20 இலட்சம் கொடுக்க முயன்ற கும்பல்

யாழில் புலனாய்வு துறைக்கு 20 இலட்சம் கொடுக்க முயன்ற கும்பல்

0

நாட்டில் தற்போது இஷாரா செவ்வந்தி விவகாரத்தை தொடர்ந்து, லசந்த விக்ரமசேகர படுகொலை என பல்வேறு பரபரப்பு சம்பவங்கள் இடம்பெற்று கொண்டிருக்கின்றன. 

அதேநேரம், யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பிலும் பல்வேறு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருப்பதாக பேசப்படுகின்றது. 

இந்நிலையில், கடந்த 22ஆம் திகதி யாழில் போதைப்பொருள் கடத்தல்கள் மற்றும் விற்பனையில் ஈடுபடும் சிலர் புலனாய்வு அதிகாரியிடம் 20 இலட்சம் தருவதாக பேரம் பேசியுள்ளனர். 

பேரம் பேசிய கும்பல்

குறித்த நபர்களை கைது செய்வதற்காக சம்பவ இடத்திற்கு முதலில் சென்ற புலனாய்வு அதிகாரி சுதர்சனிடமே இவ்வாறு பேரம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதன்போது, குறித்த கும்பலை சேர்ந்தவர்கள், அதிகாரியிடம் 20 இலட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ள நிலையிலும் அந்த அதிகாரி கடமையை தவறாது செய்துள்ளார். 

அதேவேளை, பல நுணுக்கமான முறையில் குறித்த கும்பலை சேர்ந்தவர்கள் பேரம் பேசியுள்ளதுடன் அதனை ஏற்க வேண்டும் என்று மேலும் சில பேரங்களை முன்வைத்துள்ளனர். 

இந்நிலையில், அந்த அதிகாரி வளைந்து கொடுக்காது அடுத்த நகர்வை மேற்கொண்டு அவர்களை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

NO COMMENTS

Exit mobile version