Home சினிமா என்னை மோசமான ஆளாக ஆக்கிட்டீங்களே.. கங்கை அமரன் குமுறல்!

என்னை மோசமான ஆளாக ஆக்கிட்டீங்களே.. கங்கை அமரன் குமுறல்!

0

கங்கை அமரன்

தமிழ் சினிமாவில் இயக்குநராகவும், பாடலாசிரியராகவும், இசையமைப்பாளராகவும் அறியப்படுபவர் கங்கை அமரன். இவர் இசைஞானி இளையராஜாவின் சகோதரர் என்பதை அனைவரும் அறிவோம்.

ஒரு விடுகதை ஒரு தொடர்கதை என்ற படத்தின் மூலம் 1979ஆம் ஆண்டு இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து திரைத்துறையில் பயணித்து வந்த இவர், கரகாட்டக்காரன் என்ற ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்தார்.

இயக்குநராக மட்டுமின்றி இசையமைப்பாளராகவும், பாடலாசிரியராகவும், பின்னணி பாடகராகவும் பன்முக திறமை கொண்டவராக விளங்கினார்.

மாடர்ன் லுக்கில் கலக்கும் நடிகை அஞ்சு குரியன்.. கொள்ளை கொள்ளும் அழகு!

விளக்கம்! 

இந்நிலையில், கங்கை அமரன் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்த போது, பின்னால் நின்ற ரசிகரிடம், ‘முக்கியமானவர்கள் பேட்டிக்கொடுக்கும்போது இப்படி பக்கத்தில் இருந்து முறைப்பதா? என்று கேள்வி எழுப்பினார்.

இந்த செயல் சர்ச்சைக்கு உள்ளானது. இதற்கு தற்போது கங்கை அமரன் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், ” நான் பேசும்போது, அருகில் இருந்த அந்த நபர் என்னை பார்க்காமல் கேமராவை பார்த்து குதூகலிக்கிறார்.

இதனால் தொந்தரவு தானே ஏற்படும். இதன் காரணமாக தான் நான் அப்படி நடந்துகொண்டேன். அதை பெரிதுபடுத்தி என்னை மோசமான ஆளாக ஆக்கிட்டீங்களே” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version