Home இலங்கை குற்றம் தொட்டலங்க கண்ணா கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது

தொட்டலங்க கண்ணா கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது

0

போதைப்பொருள் குற்றச்சாட்டில் உயர் நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த கனபதி கணேஷ் அல்லது தோட்டலங்க கண்ணா கொட்டாஞ்சேனை பொலிஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாண குற்றப் பிரிவின் இரகசிய தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2014ஆம் ஆண்டில், எலகந்த பகுதியில் 39 கிராம் ஹொரோயின் வைத்திருந்த மற்றும் கடத்திய குற்றச்சாட்டில் கனபதி கணேஷ் அல்லது தோட்டலங்க கண்ணா மீது சட்டமா அதிபரால் HC 8326/2016 இன் கீழ் வழக்கு தொடரப்பட்டது.

ஆயுள் தண்டனை விதிப்பு

அதன்படி, நீண்ட வழக்கு விசாரணைக்கு பின்னர், கொழும்பு உயர் நீதிமன்றம் குறித்த சந்தேகநபருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. மேற்கண்ட வழக்கு விசாரணையின் போது குற்றவாளிக்கு பிணை வழங்கப்பட்ட நிலையில், அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றார்.

அதன்படி, இன்று 15.10.2025, மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் கம்பஹா பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,கொட்டாஞ்சேனை காவல் நிலையத்தினால் Grand park residencies ,எண். 45, 1/4, ஆறாவது லேன், கொட்டாஞ்சேனை, கொழும்பு என்ற முகவரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version