Home உலகம் பிரிட்டன் விதித்துள்ள தடை : வரவேற்ற கனடாவின் நீதியமைச்சர் ஹரி

பிரிட்டன் விதித்துள்ள தடை : வரவேற்ற கனடாவின் நீதியமைச்சர் ஹரி

0

இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் விதித்துள்ள தடைகளை கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) வரவேற்றுள்ளார்.

ஹரி ஆனந்தசங்கரின் உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்திலேயே (X) அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கனடாவின் நீதியமைசர்

குறித்த பதிவில் மேலும், “இலங்கை அதிகாரிகளிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதித்துள்ளதை நான் வரவேற்கின்றேன் .

இலங்கையில் பொறுப்புக்கூறலை நோக்கிய மற்றுமொரு முக்கியமான நடவடிக்கை இது.

2023 இல் கனடா , மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விதித்த தடைகளை தொடர்ந்து பிரிட்டனும் தடைகளை விதித்துள்ளது.

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விடுவிக்கப்படும் கலாச்சாரத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கும், சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் கனடா தொடர்ந்து பாடுபடும் என்றும் கனடாவின் நீதியமைசர் ஹரி ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/NSWqcX37Oto

NO COMMENTS

Exit mobile version