Home விளையாட்டு இந்தியாவின் வெற்றி வாய்ப்பைத் தடுத்த இளம் வீரர் – பாராட்டிய கௌதம் கம்பீர்

இந்தியாவின் வெற்றி வாய்ப்பைத் தடுத்த இளம் வீரர் – பாராட்டிய கௌதம் கம்பீர்

0

இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷவை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பாராட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, டெஸ்ட் கிரிக்கெட்டில் குணம், பொறுமை மற்றும் மன வலிமை மிகவும் முக்கியம்.

இவை அனைத்தையும் இந்திய அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக வெளிப்படுத்தினர்.

இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ மிகவும் அற்புதமாக விளையாடினார் எனப் பதிவிட்டுள்ளார்.

முழுமையாக வெல்லும் வாய்ப்பு 

இந்தியா – இலங்கை இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது.

இந்தத் தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

தொடரை முழுமையாக வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு இருந்தது.

அதனை தனது அபார ஆட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தினார் இலங்கை அணியின் இளம் வீரர் சொனல் தினுஷ.

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 100 மற்றும் 84 ஓட்டங்கள் குவித்த சொனல் தினுஷ, இரண்டாவது டெஸ்ட்டில் 103 மற்றும் 133* ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இறுதிவரைப் போராடிய இந்திய அணியின் மன வலிமையை பாராட்டுவதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/gautam-gambhir-special-shoutout-to-sonal-dinusha-1787987434

NO COMMENTS

Exit mobile version