Home இலங்கை சமூகம் வடக்கில் கால் வைக்க விட மாட்டோம் : அரசுக்கு சுமந்திரன் விடுத்த அதிரடி எச்சரிக்கை

வடக்கில் கால் வைக்க விட மாட்டோம் : அரசுக்கு சுமந்திரன் விடுத்த அதிரடி எச்சரிக்கை

0

வடக்கில் தமிழர்களின் காணிகளை அரச காணிகளாக பிரகடனப்படுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை மீள பெறாவிட்டால் வடக்கில் அரசை கால் வைக்க விட மாட்டோம் என சட்டத்தரணி சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தை கிளிநொச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மக்களை ஏமாளிகள் என ஒரு போதும் நினைக்க வேண்டாம், காரணம் இது நிலம் தொடர்பிலான விடயம்.

நாங்கள், இராணுவத்தினர் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க போராட்டம் மற்றும் வழக்கு என பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கும் நேரத்தில் அரசு இவ்வாறானதொரு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த வர்த்தமானியை மீள பெறாவிட்டால் வடக்கில் அரசை கால் வைக்க விட மாட்டோம் என வெளிப்படையாக எச்சரிக்கின்றோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.youtube.com/embed/ehCi5cRVJns

NO COMMENTS

Exit mobile version