Home இலங்கை சமூகம் வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு : வெளியானது வர்த்தமானி

வைத்தியர்களின் ஓய்வு வயது நீடிப்பு : வெளியானது வர்த்தமானி

0

அனைத்து வைத்தியர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும் என விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஓய்வூதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின்படி, 2022 டிசம்பர் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் திருத்தப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கட்டாய ஓய்வு வயது

தொடர்புடைய வர்த்தமானி அறிவித்தலின்படி, விசேட வைத்தியர்கள், தரப்படுத்தப்பட்ட வைத்திய மற்றும் பல் வைத்திய அதிகாரிகள், அனைத்து வைத்திய நிர்வாக அதிகாரிகள், விசேட பல் வைத்தியர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வைத்திய நிபுணர்களின் கட்டாய ஓய்வு வயது 63 ஆக இருக்க வேண்டும்.

அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஏற்பாடுகள் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியர்களுக்கான ஓய்வு வயது 63 ஆக அதிகரிக்கப்படும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜெயதிஸ்ஸ(nalinda jayatissa)கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version