வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள காணிகளை தமிழ் மக்கள் உரிமை கோரா விட்டால் அது அரச காணிகளாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டு வர்த்தமானி ஒன்று வெளியாகி இருந்தது.
குறித்த வர்த்தமானி கடந்த மார்ச் 28 ஆம் திகதி வெளியாகி இருந்தநிலையில், தொடர்ந்து குறித்த பிர்ச்சினை தலைதூக்கி பாரிய அதிர்வலைகலை கிளப்பி இருந்தது.
இதையடுத்து, குறித்த வர்த்தமானியை மீளப்பெருவதாக அரசாங்கம் அண்மையில் அறிவித்து இருந்தது.
இதன்பின்பு, இவ்வாறு மக்கள் காணிகள் காப்பாற்றப்பட்டமைக்கு தாங்கள்தான் காரணம் என தமிழ் தலைமைகள் கருத்துக்கள் வெளியிட ஆரம்பித்த நிலையில், அது அவர்களின் சாதகமான அரசியலுக்கு ஒரு யுக்தியாகவும் காணப்பட்டது.
இது தொடர்பில் லங்காசியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் தெரிவித்த அவர், அரசாங்கமாக இருந்தாலும் தமிழர் தரப்பு அரசியல் தலைமைகளாக இருந்தாலும் இழந்த அரசியல் வீதத்தை மீள கட்டியெழுப்ப இந்த விவகாரத்தை கையில் எடுப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், குறித்த காணி தொடர்பிலான பிண்ணனி, வர்த்தமானிஈ தமிழர் அரசியல் தலைமைகளின் அரசியல் நிர்வாகம், அரசாங்கத்தின் அடுத்த கட்டம் மற்றும் பலதரப்பட்ட அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் தெரிவித்த கருத்துக்களுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு,
https://www.youtube.com/embed/9lp1F3Vchmc
