Home இலங்கை சமூகம் வேகக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

வேகக்கட்டுப்பாடு தொடர்பில் வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்

0

வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் வேகத்தடை தொடர்பான விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியிடப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஆம் ஆண்டில் 2,214 வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதோடு இதன் விளைவாக 2,321 இறப்புகள் ஏற்பட்டுள்ளன என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

வேகக் கட்டுப்பாட்டு உபகரணங்கள்

கடந்த ஜூன் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,103 சாலை விபத்துகள் இடம்பெற்றுள்ளதோடு 1,154 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனவே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில், வீதி விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் எமது அமைச்சு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

வீதிப்பாதுகாப்புக்கான தேசிய சபை வேகக் கட்டுப்பாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக ரூ. 50 மில்லியனை இலங்கை பொலிஸாருக்கு வழங்கியுள்ளது .

இந்நிலையில், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் புதிய வேகக்கட்டுப்பாடு வரம்பு விதிமுறைகளுடன் கூடிய வர்த்தமானியை போக்குவரத்து அமைச்சகம் வெளியிடும் என்றும் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version