Home இலங்கை கல்வி வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

வெளியாகியுள்ள சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் – மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்

0

2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறு முடிவுகளை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களை ஜூன் 25 ஆம் திகதி முதல் விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மீள் திருத்த விண்ணப்பங்களை ஜூலை 7 ஆம் திகதி வரை இணையவழியில் சமர்ப்பிக்கலாம் என்று அத்துறை கூறியுள்ளது.

பெறுபேறுகளை பார்வையிடலாம் 

2025ஆம் ஆண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர சாதாரணப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றிரவு வெளியாகின.

இதற்கமைய, பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு 451,463 பரீட்சார்த்திகள் தோற்றியுள்ளனர்.

பரீட்சையானது 3,547 பரீட்சை மத்திய நிலையங்களில் நடத்தப்பட்டதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

Source: https://tamilwin.com/article/gce-ol-exam-results-recorrection-in-sri-lanka-1781929770

NO COMMENTS

Exit mobile version