Home இலங்கை கல்வி இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை: 34 மாணவர்கள் 9 A சித்தி

இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி சாதனை: 34 மாணவர்கள் 9 A சித்தி

0

2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) வெளியிட்டுள்ளது . 

அந்தவகையில் வெளியான சாதாரண பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் வவுனியா – இறம்பைக்குளம்
மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் 23 மாணவர்களும் ஆங்கில மொழி மூலம் 11
மாணவர்களுமாக 34 மாணவர்கள் 9 பாடங்களில் ஏ தர சித்தியை பெற்றுள்ளனர்.

இதேவேளை 17 மாணவர்கள் தமிழ் மொழி மூலமாகவும் 3 மாணவர்கள் ஆங்கில மொழி
மூலமாகவும் 8 பாடங்களில் ஏ தர சித்தியையும் பெற்றுள்ளனர். 

பரீட்சை மீள் மதிப்பீட்டு

இதேவேளை, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி, 237,026 மாணவர்கள் உயர்தரக் கல்விக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் A.K.S. இந்திகா குமாரி (A.K.S. Indika Kumari) தெரிவித்துள்ளார்.

இது சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் எண்ணிக்கையில் 73.45% என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், 13,392 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் 9 A சித்திகளை பெற்றுள்ளதாகவும் இது மொத்தப் பரீட்சார்த்திகளில் 4.15% என பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டார்.

மேலும், பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version