Home உலகம் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் – சமர்ப்பிக்கப்படும் இலங்கை தொடர்பான அறிக்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பம் – சமர்ப்பிக்கப்படும் இலங்கை தொடர்பான அறிக்கை

0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று (08) ஆரம்பமாகிறது.

இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அறிக்கை

இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

இதன்படி அவர் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.45 இற்கு இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளார்.

இந்த விஜயத்தின் போது ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது.

NO COMMENTS

Exit mobile version