Home இலங்கை சமூகம் பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்ட இன அழிப்பு வாரம்

பொலிஸாரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்ட இன அழிப்பு வாரம்

0

மட்டக்களப்பில் இன அழிப்பு வாரம் நிகழ்வு இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட
நிலையில் அங்குவந்த மக்களை அச்சுறுத்தும் வகையில் சீருடையில் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்த பொலிஸ் உத்தியோகத்தர் நாடாளுமன்ற உறுப்பினரினால் எச்சரிக்கப்பட்டுள்ளார். 

சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்
மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரினால் எச்சரிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கிருந்து
சென்றுள்ளார்.

தமிழ் இன அழிப்பு வாரம் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் உணர்வுபூர்வமாக
ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தமிழ் இன அழிப்பு வாரம்

மட்டக்களப்பில் பெருமளவான மக்கள் கடத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்ட
சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி அருகில் தமிழ் இன அழிப்பு வாரம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இதன்போது அங்கு சிவில் உடையில் வந்த கொக்குவில் பொலிஸ் நிலையத்தில்
கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் என்று தெரிவிக்கப்படும் ஒருவர்
நிகழ்வினையும் நிகழ்வில் வந்தவர்களையும் புகைப்படம் எடுத்ததுடன் அங்கு
நடைபெறும் நிகழ்வுகளையும் வந்தவர்களையும் காணொளி செய்யும் நடவடிக்கையும்
தொடர்ச்சியாக ஈடுபட்டதோடு நிகழ்வுகளை குழப்பும் வகையில் செயற்படுவதாக
அங்கிருந்தவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version