Home இலங்கை சமூகம் பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை விதிப்பு!

பாடசாலை நேரங்களில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை விதிப்பு!

0

பாடசாலை நடைபெறும் நேரங்களில் கனிமங்கள் மற்றும் மணல் கொண்டு செல்லும் டிப்பர் மற்றும் உழவு இயந்திரங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவது இன்று முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகத்தின் அத்தியட்சர் தீபானி வீரகோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், ”கடந்த 27 ஆம் திகதி குளியாப்பிட்டியவில் பாடசாலை வானும் மணல் ஏற்றி வந்த டிப்பரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு மாணவர்கள் பலியானதுடன் வான் சாரதி அந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இன்று முதல் தடை

அந்த சம்பவத்தை தொடர்ந்தே பாடசாலை நேரங்களில் கனிமங்கள்,மணல் போக்குவரத்தை முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் 6.30 தொடக்கம் 7.45 மணி வரையும் பகல் 11.30 தொடக்கம் 2.30 மணி வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நேரங்களில் கனிமங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதாக இருந்தால் குறித்த வாகனங்களை பாதையில் நிறுத்தி கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகத்தின் பிரதேச அலுவலங்களுக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்தந்த பிரதேசத்தில் உள்ள பொலிஸாருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறித்த விடயத்தை நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு மூன்று கிழமைகள் பரிச்சார்த்த காலம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் சட்டம் ஓகஸ்ட் மாதம் முதல் கடுமையாக்கப்படும் என புவிச்சரிதவியல் ஆராய்ச்சி மற்றும் சுரங்க பணியகத்தின் அத்தியட்சர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version