Home இலங்கை சமூகம் யாழில் எறும்புக் கடிக்கு இலக்காகி 21 நாளேயான சிசு உயிரிழப்பு

யாழில் எறும்புக் கடிக்கு இலக்காகி 21 நாளேயான சிசு உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம் (Jaffna) – மானிப்பாய் பகுதியில் பிறந்து 21 நாளான பெண் சிசு ஒன்று எறும்பு கடித்ததன் காரணமாக உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தம்பதியினருக்கு கடந்த 22 ஆம் திகதி பெண்
சிசு பிறந்துள்ளது.

குறித்த சிசுவிற்கு நான்கு நாட்களுக்கு முன்னர் எறும்பு கடித்த நிலையில் அதனை
பெற்றோர் கவனிக்காமல் விட்டுள்ளனர்.

கிருமி தொற்று 

இதன் காரணமாக நேற்றைய தினம் (12) அதிகாலை
பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனையில் , எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு
உடற்கூறுகளின் செல்கள் செயலிழந்தமையால் மரணம் சம்பவித்துள்ளது என
குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version