Home இலங்கை குற்றம் பெற்றோரின் மோதலில் மகளுக்கு நேர்ந்த துயரம் – தாயின் கொடூர செயல்

பெற்றோரின் மோதலில் மகளுக்கு நேர்ந்த துயரம் – தாயின் கொடூர செயல்

0

கம்பளை பிரதேசத்தில் பெற்றோருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சிக்கிய சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

9 வயது சிறுமி பலத்த தீக்காயங்களுடன் பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கலஹா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. குடும்ப தகராறில் பெற்றோர் வீட்டிற்கு தீ வைத்த போது சிறுமி அதில் சிக்கியுள்ளார்.

தீ வைத்த தாய்

தகராறைத் தொடங்கிய தனது கணவர், சிறுமியை தீ வைத்ததாக சிறுமியின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும் தனது கணவரை சிக்க வைக்கும் நோக்கில் தாய் இந்த செயலை செய்ததாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும், விசாரணையை நடத்தி வரும் பொலிஸார் பல வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.

இதுவரை ஆபத்தான நிலையில் உள்ள சிறுமியிடம் வாக்குமூலம் பெற முடியவில்லை.

இந்த சம்பவத்திற்குப் பிறகு சிறுமியின் தந்தை அப்பகுதியை விட்டு தப்பி ஓடியுள்ளார்.

அவரைக் கண்டுபிடிக்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version