Home இலங்கை சமூகம் வட்டுக்கோட்டையில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி!

வட்டுக்கோட்டையில் தவறான நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி!

0

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொல்புரம் பகுதியில் 14 வயதுச்
சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய மேலும் இருவர் நேற்றையதினம்
வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் முற்படுத்திய
நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

குறித்த சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக இவ்வாறு பாதிக்கப்பட்டு வந்த நிலையில்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு
பதிவு செய்ப்பட்டுள்ளது.

மூவர் கைது 

இந்நிலையில் இந்த விடயம் வட்டுக்கோட்டை பொலிஸாரின்
கவனத்துக்கு கொண்டுவரப்பட்டு நேற்றுமுன்தினம் இரண்டு பெண்கள் உட்பட
மூவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மேலும் இரு ஆண்கள் நேற்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது
செய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை அவர்களை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

கைது செய்யப்பட்ட இருவரும்
45 மற்றும் 52 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version