Home இலங்கை சமூகம் சன நெரிசலில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய அநுர..!

சன நெரிசலில் சிக்கிய குழந்தையை காப்பாற்றிய அநுர..!

0

சம்மாந்துறையில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தி (NPP) பேரணியின் போது, ​​கூட்டத்திற்குள் சிக்கிக்கொண்ட ஒரு பெண் குழந்தையை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க காப்பாற்றியுள்ளார். 

பேரணியின் போது, அங்கு வந்திருந்தவர்களுக்கு மத்தியில் பெண் குழந்தை ஒன்று சன நெரிசலில் சிக்கிக் கொண்டுள்ளது.

 செல்ஃபி எடுக்க முயற்சி 

இதனை அவதானித்த ஜனாதிபதி அநுர குமார, உடனடியாக அந்த குழந்தையை தூக்கி பாதுகாப்பாக அருகிலேயே நிறுத்திக் கொண்டார். 

பேரணியில், ஏராளமான ஆதரவாளர்கள் செல்ஃபி எடுக்க ஜனாதிபதியின் அருகில் சென்ற போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இதன்போது, கூட்டத்தில் குழந்தை தடுமாறிக் கொண்டிருந்ததைக் கவனித்த ஜனாதிபதி, தனிப்பட்ட முறையில் தலையிட்டு அவளைப் பாதுகாப்பாக மீட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version