Home இலங்கை சமூகம் யாழில் இடம்பெறவுள்ள வர்த்தகப்புரட்சி மாநாடு

யாழில் இடம்பெறவுள்ள வர்த்தகப்புரட்சி மாநாடு

0

உலக வர்த்தகர்களையும் தாயக வணிகர்களையும் இணைக்கும் வர்த்தகப்புரட்சி மாநாடு ஒன்று யாழ்ப்பாணத்தில் (Jaffna) இடம்பெறவுள்ளது.

“வாணிபம் செய்வோம்” எனும் தொனிப்பொருளில் வடக்கு ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் (Chamber of Northern Exporters) ஏற்பாட்டில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

இம்மாதம் 28 ஆம் திகதி (28.11.2025) காலை 09.30 முதல் 02.00 வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பிரதான மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சர்வதேச நாடுகளின் தூதரகங்கள், உலக வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் தாயக தொழில் முனைவோர் ஒன்றிணையும் இந்த மாநாட்டில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு +94764328771 என்ற தொலைபேசி இலக்கத்தை தொடர்புகொள்ளுங்கள்.

NO COMMENTS

Exit mobile version