உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் 20 ஆவது வருடாந்த மாநாடு மற்றும் உலக பௌத்த முன்னணியின் 5 ஆவது வருடாந்த மாநாடு யாழ்ப்பாணத்தில் (Jaffna) நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ் நயினாதீவு ரஜமகா விகாரையில் நேற்று (22) ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தவகையில், 27 நாடுகளில் இருந்து சுமார் 350 பௌத்த மத பிரதிநிதிகள் இந்த நிகழ்விற்கு வருகை தந்துள்ளனர்.
முத்திரை வெளியீடு
இந்த நிகழ்வில் பல்வேறுபட்ட கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் ஞாபகார்த்த நினைவு முத்திரையும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் தலைவர், உலக பௌத்த முன்னணியின் தலைவர், உலக இளைஞர் பௌத்த சங்க சபையின் பிரதிநிதிகள், உலக பௌத்த முன்னணியின் பிரதிநிதிகள், விகாராதிபதிகள், பௌத்த பிக்குகள், யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளை தளபதி, வடக்கு மாகாண கடற்படை தளபதி உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் எனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.