Home இலங்கை இலங்கை வானில் குளோப்மாஸ்டர்கள் ஹெர்குலிஸ்களின் வட்டமடிப்பு!

இலங்கை வானில் குளோப்மாஸ்டர்கள் ஹெர்குலிஸ்களின் வட்டமடிப்பு!

0

இலங்கை ஒரு ஏழைநாடு என்பதால் தித்வா சூறாவளி போன்ற அவலநேரங்களை சமாளிப்பதற்கு வளங்கள், குறைவாக இருப்பதால் அநுர அரசாங்கத்தால் அற்புதங்களைச் செய்ய முடியாது என சிறிலங்காவின் பீல்ட் மார்சல் ஆதரவு குரல் கொடுக்கிறார்.

ஆனால் இலங்கை ஒரு ஏழைநாடு என முத்தாய்ப்பு சொல்லும் வைத்த சிறிலங்காவின் பீல்ட் மார்சலுக்கு இதே ஏழைநாட்டில் தமிழர்களின் அரசியல் உரிமையை ஒடுக்க பெரும் செலவீனத்தில் ஊதிப் பெருப்பிக்கபட்ட முப்படையினர் இன்னும் அதே தொகையில் உள்ளனர்.

இன்று உட்பட வருடாவருடம் ஒப்பேற்றப்படும் வரவு செலவுத் திட்டங்களில் இவர்கள் பாதுகாப்பு செலவீனம்; என்ற பெயரில் பல பில்லியன்களை விழுங்க ஏழை நாட்டு பல்லவிகள் வருகின்றன.

இவ்வளவு பெருங்கிய வீங்கிய படைத்துறையை வைத்திருக்கும் அதே நாட்டில் நடந்த இயற்கை பேரவலங்களை எதிர்கொள்ள இந்தியாவும் இப்போது இரண்டாம் உலகப் போர்க்கால கண்டு பிடிப்பான பெய்லி ரக அவசரகாலப் பாலங்களை பொருத்தி உதவுகிறது.

இதனால் இலங்கைக்கு உதவ வெளிநாட்டு வான்படைகளின் குளோப்மாஸ்டர் விமானங்களும் ஹெர்குலிஸ்களும் அன்ரனோவ்களும் அடிக்கடி பறக்கும் நிலையில் இலங்கை விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு… 

https://www.youtube.com/embed/-bLdonwwTHc

NO COMMENTS

Exit mobile version