Home இலங்கை குற்றம் ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில், ஞானசார தேரர் இஸ்லாத்துக்கு எதிரான கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

மேலதிகமாக அபராதமும் விதிப்பு

அதன் போது அவர் குறிப்பிட்ட “இஸ்லாம் ஒரு புற்றுநோய், அழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்தின் மூலம் இனங்களுக்கிடையிலான நல்லுறவை சீர்குலைத்து, அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் குற்றமொன்றை அவர் புரிந்துள்ளதாக கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன இன்று தீ்ர்ப்பளித்துள்ளார்.

அதன் பிரகாரம் ஞானசார தேரருக்கு இலகு பணிகள் கொண்ட ஒன்பது மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக ஆயிரத்து ஐநூறு ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  

NO COMMENTS

Exit mobile version