ஐக்கிய இராச்சியத்தில் வாழும், கரவெட்டி ஞானசாரியர் கல்லூரி, பழைய மாணவர்களால் (UK கிளை) ஒருங்கிணைக்கப்பட்ட “2025 கோலாகல கோடைவிழா” லண்டனில் விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
இவ்விழா, கல்வி, பண்பாடு மற்றும் சமூக ஒற்றுமையின் மையக் கருத்துக்களைச் சுமந்து, ஈழத் தமிழர் புலம்பெயர் சமூகம் வளர்த்தெடுத்த வரலாற்று நிகழ்வாக பதிவாகியது.
விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், சமூகத்தினரின் கலந்து கொள்வதோடு மட்டுமல்ல, கலந்துணர்வும், பெருமிதமும் அதிக அளவில் பிரதிபலித்ததாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
கல்வித் தொன்மை
இவர்கள் தலைமையில் விழா, பல தலைமுறைகளை ஒன்று சேர்த்து, கல்வித் தொன்மையும், ஈழத் தமிழர் பண்பாட்டு அடையாளத்தையும் உருக்கொண்டு உலகம் முழுவதும் பரப்பிய நிகழ்வாக அமைந்ததாகவும் கூறப்படுகிறது.
குறித்த விழாவானது தலைவர் அருள்நந்தி, செயலாளர்: ஜெயவாணி,
உப செயலாளர்: பஜீகரன், பொருளாளர்: சிவரூபன் ஆகியோரின் ஏற்பாட்டில் விழா சிறப்புற இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்துக்கொண்ட லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் நிஷான் கனகராஜா உரையில், “தோல்வியைப் கண்டு பயப்பட வேண்டாம், ஒற்றுமையாக செயல்படுங்கள்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், “தாய்மையின் மென்மை, தந்தையின் நம்பிக்கை தான் குழந்தையின் தன்னம்பிக்கையின் வேர்கள்” என்ற பொருள்தரும் வரையிலான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
குறுகிய வசதிகளுடன் ஆரம்பித்த இந்த கல்வி பயணம், இன்று உலகளாவிய தமிழரின் கல்வித் தளமாக வளர்ந்துள்ளது.
இது ஈழத் தமிழர் சமூகத்தின் உறுதியையும், ஒருமைப்பாட்டையும் விளக்கும் மகத்தான நிகழ்வாக கருதப்படுகிறது.
