தளபதி விஜய்யின் GOAT
GOAT திரைப்படம் முதல் நாளில் இருந்தே வசூலில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் கூட வசூல் பட்டையை கிளப்பி வருவதாக கூறப்படுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த இப்படம் முதல் நாளே உலகளவில் ரூ. 126 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. மேலும் தமிழ்நாட்டில் முதல் நாள் ரூ. 30 கோடி வசூல் செய்ததாக தகவல் வெளிவந்தது.
அதே போல் வெளிநாட்டிலும் முதல் நாள் வசூல் பெரிதாக இருந்தது என்கின்றனர். இந்த நிலையில் பாக்ஸ் ஆபிஸில் மூன்று நாட்களை கடந்துள்ள GOAT திரைப்படம் வெளிநாட்டில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாடு வசூல்
அதன்படி, மூன்று நாட்களில் வெளிநாடுகளில் ரூ. 97 கோடி 2வரை வசூல் செய்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் GOAT திரைப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்து சாதனை படைக்கபோகிறது என்று.
Source: https://cineulagam.com/article/goat-movie-3-days-overseas-box-office-collection-1725778496
