Home இலங்கை குற்றம் முள்ளியவளையில் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவியின் தங்க சங்கிலி அறுப்பு

முள்ளியவளையில் வகுப்பிற்கு சென்று விட்டு வீடு திரும்பிய மாணவியின் தங்க சங்கிலி அறுப்பு

0

முல்லைத்தீவு, முள்ளியவளை நகர் பகுதி வீதியில் மாணவி ஒருவரின் தங்கச்சங்கி அறுக்கபட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றையதினம் (07.10.2024) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் இருந்து முள்ளியவளை நகரிற்கு
வகுப்பிற்காக உயர்தர மாணவி ஒருவர் சென்றுள்ளார்.

மேலதிக விசாரணைகள்

குறித்த மாணவி வகுப்பினை முடித்து விட்டு பேருந்து நிலையம் நாேக்கி நடந்து
சென்ற போது முள்ளியவளை பிராந்திய சுகாகார சேவைகள் திணைக்களத்திற்கு முன்பாக
மோட்டார் சைக்கிளில் வந்த இரு இளைஞர்கள் மாணவி கழுத்தில் அணிந்திருந்த ஒன்றே
கால் பவுண் தங்க சங்கிலியை அறுத்துவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இந்நிலையில், குறித்த மாணவியால் முள்ளியவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
வழங்கப்பட்டதனையடுத்து, மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version