Home இலங்கை சமூகம் யாழில் நகையை தொலைத்த பெண் : ஆச்சரியத்தில் உறைய வைக்கும் உண்மைக்கதை

யாழில் நகையை தொலைத்த பெண் : ஆச்சரியத்தில் உறைய வைக்கும் உண்மைக்கதை

0

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நகைக்கடை உரிமையாளர் ஒருவர் 23 பவுன் நகையை தொலைத்த பெண்ணை
தேடி கண்டுபிடித்து அந்த நகையை அவரிடமே கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரிய வருகையில், “பேருந்தில் பயணித்த பெண் ஒரு கடந்த 09.04.2025 அன்று தனது நகையை
தவறவிட்டுள்ளார். 

இந்நிலையில் இது குறித்து சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

பின்னர் குறித்த நகையை கண்டெடுத்தவர் அதனை நகை கடையில் கொடுத்து, இதனை என்ன செய்வது என கேட்டுள்ளார்.

 அதற்கு நகைக்கடை உரிமையாளர், நகை காணாமல் போனதாக ஏதாவது காவல் நிலையத்தில்
முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதா என தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். 

அதன்பின்னர் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டமை தெரியவந்தது.

இந்நிலையில் நகையை தொலைத்த பெண்ணை அழைத்த நகைக்கடை உரிமையாளர், மதகுரு
ஒருவருக்கு முன்னால் வைத்து அந்த நகையை கையளித்துள்ளார்.

நகையை தொலைத்த பெண்ணிடமே மீண்டும் நகையை வழங்கிய சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த
குறித்த நகைக்கடை உரிமையாளரை பலரும் பாராட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

NEWS : Kajinthan (Jaffna)

https://www.youtube.com/embed/xEX-Wkzmwc4

NO COMMENTS

Exit mobile version