Home இலங்கை பொருளாதாரம் தங்க விலையில் திடீர் வீழ்ச்சி : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

தங்க விலையில் திடீர் வீழ்ச்சி : நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

0

கடந்த சில மாதங்களாக இலங்கையில் (Sri Lanka) தங்க விலையானது சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அண்மைக்காலமாக தொடர்ந்து மாற்றத்துக்குள்ளான தங்க விலை கடந்த வெள்ளிக்கிழமை (04) அதிகரித்த நிலையில் இன்று (07.10.2024) சடுதியாக குறைவடைந்துள்ளது.

அந்தவகையில், இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 779,380 ரூபாவாக காணப்படுகின்றது.

இன்றைய நிலவரம்

24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,500 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் 219,950 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,210 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 201,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,070 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 192,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விபரங்கள்

அத்துடன், கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 208,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை, அங்கு (22 karat gold 8 grams) ஒன்று 192,800 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/gold-price-chart-in-sri-lanka-and-world-market-1728275112

NO COMMENTS

Exit mobile version