Home இலங்கை பொருளாதாரம் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி : இன்றைய நிலவரம்

மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி : இன்றைய நிலவரம்

0

இலங்கையில் (sri Lanka) தங்க விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

அண்மையில் சடுதியாக அதிகரித்த தங்க விலையானது நேற்றும் இன்றும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து செல்கின்றது. 

இன்றைய (15.08.2024) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் (Gold Ounce) விலையானது 735,266 ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய நிலவரம்

அத்துடன் 24 கரட் தங்க கிராமின் விலையானது (24 karat gold 1 grams) 25,940 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 207,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 23,780 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 190,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 22,700 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில்  21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) 181,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.

செட்டியார் தெரு விபரங்கள்

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 199,500 ரூபாவாக பதிவாகியுள்ளது.

 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) ஒன்று 184,500 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/gold-price-rate-today-in-sri-lanka-world-market-1723696320

NO COMMENTS

Exit mobile version