Home இலங்கை பொருளாதாரம் குறைவடைந்துள்ள தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

குறைவடைந்துள்ள தங்க விலை! வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சி தகவல்

0

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இந்தநிலையில், தங்கத்தின் விலை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று (08) குறைவடைந்துள்ளது.

அதன்படி, இன்றைய தினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 983,946 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 34,710 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 277,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 31,820 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 254,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 30,380 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 243,000 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

Source: https://tamilwin.com/article/gold-price-today-in-sri-lanka-1746774889

NO COMMENTS

Exit mobile version