Home இலங்கை பொருளாதாரம் 10 இலட்சம் ரூபா வரை விலைக்குறைப்பு.. புதிய வாகனங்களை வாங்க காத்திருப்போடுக்கு மகிழ்ச்சி செய்தி

10 இலட்சம் ரூபா வரை விலைக்குறைப்பு.. புதிய வாகனங்களை வாங்க காத்திருப்போடுக்கு மகிழ்ச்சி செய்தி

0

உள்ளூர் சந்தையில் வாகன விலைகள் கணிசமாகக் குறைந்துள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஏற்பட்டுள்ள மாற்றங்கள்.. 

கொழும்பில் நேற்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட, வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரிஞ்சிகே இந்த தகவல்களை வெளிப்படுத்தினார்.

சந்தையின் தற்போதைய நிலைமை மற்றும் விநியோக மாற்றங்கள் காரணமாக சில வாகனங்களின் விலை, சுமார் 10 இலட்சம் ரூபாவால் குறைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விலை குறைவினால் எதிர்வரும் காலங்களில் வாகன சந்தையில் புதிய உற்சாகம் மற்றும் பரிவர்த்தனைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளது.

Source: https://tamilwin.com/article/vehicle-price-in-sri-lanka-has-decreased-1789632112

NO COMMENTS

Exit mobile version